நயன்தாரா கூட சண்டை போட Time இல்லைங்க… விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
31 May 2023, 4:29 pm

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சண்டை போடுவீங்களா? என்ற கேள்விக்கு அதற்கெல்லாம் டைம் இல்லைங்க என கூலாக ரிப்ளை கொடுத்தார். மேலும், நாங்கள் இருவரும் தொழில் சார்ந்து , வேலை சார்த்த விஷயங்களை பேசிக்கொள்வோம் மற்றபடி சண்டையெல்லாம் வராது என கூறினார். இதை கேட்ட நெட்டிசன்ஸ், சண்டை வராத காதல் என்ன காதல்? நீங்க நிஜமாவே லவ் பண்றீங்களா? பத்தாததுக்கு வேற வயிற்றில் குழந்தை பெத்துக்கிட்டீங்க என மோசமாக ட்ரோல் செய்து விமர்சித்துள்ளனர்.

https://www.youtube.com/shorts/UPmGM4bZYY0
  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…