லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்டுக்கு இதுதான் காரணமாம்..!

Author: Vignesh
27 September 2023, 8:56 am

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் நடிகர் விஜய் வெளிநாடுகளில் நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் தமிழகத்தில் தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Leo -updatenews360

தற்போது, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. அதாவது, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கான கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஆடியோ வெளியிட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எனினும், ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி அப்டேட்டை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆடியோ வெளியீடு நடக்காததற்கு காரணம் பலர் நினைப்பது போல் இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல என்று இவ்வாறு x தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், உதயநிதியை பார்த்து விஜய் பயந்ததாக சவுக்கு சங்கர் மறைமுகமாக ஒரு டிவிட் செய்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் இப்படி ஏன் அரசியலை விஜய் மீது திணிக்கிறீர்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 524

    0

    0