எங்களுக்கு இரட்டை குழந்தை : ஜூன் மாதம் திருமணம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு அக்டோபரில் TWINS..!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2022, 7:19 pm
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில். நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம்.எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும்.என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் ,நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள் ,மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.