அந்த நேரத்தில் அப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே இல்ல.. சரண்யா மோகன் ஓபன்..!

Author: Vignesh
13 June 2024, 11:54 am

தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு தங்கை, ஹீரோவுக்கு தங்கை என குணசித்திர வேடங்களில் நடித்தே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மனம் கவர்ந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருப்பார் மேலும் கருணாஸ், கார்த்தி குமார் போன்ற பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெளியானபோது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியை தந்தது.குறிப்பாக நயன்தாராவின் தங்கையாக இந்த திரைப்படத்தில் நடித்த சரண்யா மோகன் மிகப்பெரும் அடையாளத்தை தேடிக்கொண்டார்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரண்யா கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் எதுவரை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடல் எடை கூடியிருந்த சரண்யா மோகன் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். காரணம் அவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். நாட்டியம் ஆடுவதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதற்காக தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் ஜிம் சென்று பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனுடன் யோகா, வாக்கிங் என ஆகியவற்றையும் மேற்கொண்டு வருகிறார்.

yaaradi nee mohini

சமீபத்தில், சரண்யா மோகன் அளித்த பேட்டியில், யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாரா அக்காவுடன் நான் நடித்திருந்தேன். அவங்க நிஜத்தில் ரொம்ப அன்பா இருப்பாங்க, எனக்கும் அவங்களுக்கும் சில காட்சிகள் இருந்தது. அதற்கான ஷூட்டிங் இப்போது நான் தான் முதன்முறையாக அவர்களுடன் அறிமுகமானேன். அதற்குப் பிறகு வெண்மேகம் பாடலுக்கு ஷூட்டிங் கொண்டிருந்தபோது, ஆனாலும் ஷூட்டிங் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக நான் அங்கே போய் இருந்தேன். அப்போது, என்னுடைய காட்சிகளை முடித்து விட்டு நான் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தேன்.

yaaradi nee mohini

அதனால, நயன்தாரா என்ன ஆச்சு என்று கேட்டார். நான் எனக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று சொன்னேன். அங்கிருந்த ஒரு சேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தபோது, உடனே நயன்தாரா அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு நயன்தாராவின் கேரவேனில் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டார். அதோடு, சரண்யாவின் காட்சிகள் எப்போது வருகிறதோ அப்போது மட்டும் அவங்க வெளியே வந்தால் போதும், அதுவரைக்கும் அவர்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று அங்கிருந்த எல்லோரிடமும் சொல்லிவிட்டார்.

yaaradi nee mohini

இப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால், எனக்கும் அவர்களுக்கும் பெரிய அளவில் அறிமுகமே கிடையாது. ஒரு சில சாட்ஸ் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். ஆனாலும், அவர் நடந்து கொண்ட விதம் இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் சரண்யா மோகன் தெரிவித்துள்ளார்.

  • Two years Bond with Raashi khanna Says Popular Actor 2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
  • Close menu