போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2024, 12:59 pm

நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது 10 வயதில் தான் தெரிந்துள்ளது.

இதையடுத்து இந்தியாவில் சிகிச்சை ஒத்துவரவில்லை எனபதால் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செட்டில் ஆனார்.

பின்னர் தனுஷ்க்கு சிகிச்சை அளித்ததோடு அங்கேயே ஒரு மென்பொருள் நிறுவனம் வைத்து மகன் தனுஷை சிஇஓவாகவும் ஆக்கினார்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் தனுஷ்க்கு நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமண செய்ய முடிவெடுத்தார்.

பல விமர்சனங்கள் வந்தாலும், எதையும் கண்டுகொள்ளாமல் அந்த குடும்பத்தினரிடம் பேசி சம்மததும் பெற்றறு, ஜப்பானில் கோலாகலமாக திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

இந்த சூழலில் திருமணத்தில் நடிகை மீனா, குஷ்பு, ராதிகா, சரத்குமார் என ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதையும் படியுங்க: அமரன் வசூல் வேட்டையில் செம்ம வேகம்: சிவகார்த்திகேயனின் மாஸ் சாதனை

நெப்போலியன் தனது மகன் திருமண விழாவுக்காக தமிழ்நாட்டில் பலருக்கு, குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார். ஆனால், சில காரணங்களால் பலர் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

Rajinikanth Apologize To Nepoleon

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரஜினிகாந்த், தனுஷின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததை அடுத்து நெப்போலியனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், தனுஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, தானும் அமெரிக்கா சென்றபோது அவர்களை சந்திக்கவுள்ளதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 151

    0

    0