திருநங்கையை கூட விட்டு வைக்க மாட்டான்.. சீரியல் நடிகரின் அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட பயில்வான்..!
Author: Vignesh23 June 2023, 10:37 am
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பிரபல சீரியல் நடிகரான அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்த நிலையில், இந்த ஜோடியின் பிரிவு குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
அதாவது அர்ணவுடன் திருமணத்திற்கு முன்பே மனைவியாக வாழ்ந்த திவ்யா கர்ப்பமானதால் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் திருமணம் ஆன மூன்று மாதத்தில் அர்ணவ் தன்னுடன் நடிக்கும் சீரியல் நடிகை ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக திவ்யா போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும், அதனால் ஜெயிலுக்கு சென்று தற்போது வெளியில் வந்த நிலையில், அர்ணவ் திவ்யா ஒன்றும் யோகியமானவள் இல்லை தான் ஜெயிலுக்குப் போன கேப்பில் முன்னாள் கணவருடன் உடலுறவில் இருந்துள்ளார் என ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவ்யாவும், அர்ணவ் திருநங்கையுடன் உடலுறவு கொண்டிருக்கிறார். என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இப்படியாக இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என பயில்வான் கொந்தளித்துள்ளார்.
இதே போல் தான் சீரியல் நடிகை சம்யூக்தா கணவர் விஷ்ணுகாந்த் தனக்கு 24 மணி நேரமும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார் என தெரிவித்து இருந்தார். சீரியல் நடிகர்கள் எதுக்கு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை எல்லாமே விளையாட்டா போச்சே அவர்களுக்கு என தலையில் அடித்துக் கொண்டார் பயில்வான்.