பாரதிராஜா என்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்..! இன்று வரை அதை சொல்லிக் காட்டும் ரஜினி..! இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட இது தான் காரணமா..?

Author: Vignesh
3 December 2022, 12:30 pm

தமிழ் சினிமாவில் காலத்தினால் அழியாத படங்களில் ஒன்றுதான் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அந்தத் திரைப்படத்தில் கமலின் வித்தியாசமான சப்பானி கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமாவில் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது.

அதேபோல் நடிகை ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரம் பலராலும் ஈர்க்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியை அடைய துடிக்கும் வில்லனாக பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்த இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

bharathiraja rajini - updatenews360

ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றது. மேலும், ரஜினிக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது அப்பொழுது இயக்குனர் பாரதிராஜாவின் அசி ஸ்டன்டாக பணியாற்றிய இயக்குனரும் மற்றும் நடிகருமான பாக்கியராஜ்.

இன்று கோடிலில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ரஜினி 16 வயதினிலே படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் தெரியுமா.? அந்த திரைப்ப டத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

bharathiraja rajini - updatenews360

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு முதலில் 3000 ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்கள். ஆனால், கடைசி நேரத்தில் பாரதிராஜா வெறும் 2500 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளர். இன்று வரை பல மேடைகளில் பேசும்பொழுது ரஜினி இயக்குனர் பாரதிராஜா இன்னும் அந்த 500 ரூபாய் பாக்கி கொடுக்கவில்லை என்று நக்கலாக சொல்லி காண்பித்து வருகின்றார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 636

    3

    0