அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

Author: Hariharasudhan
10 March 2025, 5:55 pm

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே, நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விக்ரமன், அடுக்குமாடி குடியிருப்பில் பெண் வேடமணிந்து ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சர்ச்சை பேச்சு பேசுபொருளானது.

மேலும், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, இது தொடர்பாக விக்ரமன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விக்ரமனின் மனைவி இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “நாங்கள் இதற்கு முன்பு தங்கியிருந்த குடியிருப்பில் ஷூட் சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்க வேண்டியிருந்தது. நான் வெளியூரில் இருந்தபோது எடுத்த வீடியோ அது. நான் ஒரு படம் எடுக்கிறேன்.

Vikraman wife press meet

அதில் நடிப்பதற்காகத்தான் அவரை இது போன்ற வீடியாவை எடுத்து தரச் சொன்னேன். ஆனால், அந்த வேடத்தில் அவரைப் பார்த்தவர்கள் திருநங்கை என்று நினைத்துக் கொண்டு தாக்கிவிட்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் செய்ததுதான் குற்றம். அவர்கள் மீது தான் தவறு இருக்கிறது.

இதையும் படிங்க: யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது சம்பந்தமே இல்லாமல் பிரச்னையாக மாற்றி உள்ளார்கள். அந்த வீடியோவை தேவையில்லாமல் பகிர்ந்து அவதூறு பரப்பி உள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கத்தான் காவல் நிலையம் வந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!
  • Leave a Reply