என்ன ஆச்சு விஷ்ணு விஷாலுக்கு..? ட்டுவிட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
21 April 2022, 12:41 pm

தமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க பெரிய நடிகர் என்ற பெயர் வாங்க நிறைய நடிகர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் உழைக்க தயாராக இருந்தாலும் கதைகள் அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதில்லை. அப்படி ஒரு நல்ல கதைக்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு சென்று நடிக்க துணிந்த நடிகர் தான் விஷ்னு விஷால்.

ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதைகள் நடித்துவந்த அவர் இப்போது அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, வசூல் மற்றும் விமர்சன ரிதியாக உச்சத்தை எட்டியது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால் தனது படம் குறித்தும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

தற்போது அவர் எல்லா சமூக வலைதளங்களில் இருந்தும் பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என கொஞ்சம் ஷாக் அடைந்தாலும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி