முன்னாள் காதலியை பழி வாங்கிய சிம்பு?… என்ன இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
17 June 2023, 6:15 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன் என்கின்ற எஸ் டி ஆர் இவர். தமிழ் சினிமாவில் சிம்பு என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மெருகேற்றி நிரூபித்தவர் சிம்பு.

சமீபத்தில் வெளியான இவரது பத்து தல திரைப்படம் கலவியான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்பு பற்றிய புதிய செய்தி ஒன்று காட்டுத் தீயாக வெளியாகி வருகிறது. அதில், சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் காதலித்து வந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

Simbu - updatenews360

இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதல் தோல்வியிலிருந்து சிம்பு தன் காதலி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை வெறுப்பு ஏற்றுவதற்காக ஒரு சில செயல்களில் ஈடுபட்டாராம். அது தற்போது செய்தியாக வெளியாகி வைரலாக வருகிறது.

சிம்புவை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு வயது மூத்தவர் என்பதை அனைவரும் அறிவோம். அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்ற காரணத்தினால் தன்னை விட வயது மூத்த ஹீரோயின்களுடன் சிம்பு திரைப்படங்களில் நடித்தும் அவர்களை கலாய்த்தும், வந்தது தற்போது செய்தியாக வெளியாகி இருக்கிறது. அவர்கள் எந்த ஹீரோயின்கள் என்னென்ன படங்களில் சிம்பு நடித்திருக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

Simbu - updatenews360

2004 ஆம் ஆண்டு ஹரிஷ் ஜெயராஜ் இசையில், ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோவில். இந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருப்பவர் சோனியா அகர்வால். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அற்புதமாக இருக்கும். சோனியா அகர்வால் சிம்புவை விட ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu - updatenews360

சிம்புவுக்கு பிடித்தமான ஹீரோயினான ஜோதிகா உடன் மன்மதன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார். ஜோதிகா சிம்புவை விட நாலு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வயது வித்தியாசமே தெரியாத அளவிற்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி இந்த இரண்டு படங்களில் அற்புதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Simbu - updatenews360

வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் பள்ளிப் பருவ காதலியாக நடித்திருப்பவர் ரீமாசென் மேலும், அந்த திரைப்படத்திலும் சிம்புவை விட ஒரு வயது மூத்தவராக நடித்திருப்பார். இந்த படத்தில் வில்லியான ரீமாசென் சிம்புவை கலாய்ப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருக்கும்.

aishwarya dhanush - updatenews360

என்னதான் சிம்பு தனது முன்னாள் காதலியை வெறுப்பேற்றினாலும் சிம்புவை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி வருவது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 677

    0

    0