அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்கிற தகவலை பிரபல நடிகர் கூறிய தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. ‘வாரிசு’ திரைப்படமும் ‘துணிவு’ திரைப்படமும் இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளதாலும், விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல் இயக்குனர் எச்.வினோத் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் மோதல் நிகழ உள்ளதை அறிந்து, நடிகர் அஜித் சூசகமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என அஜித் கூறியுள்ளார்.
இதன் மூலம் அஜித்தின் இந்த அறிக்கை, எவ்வித பொறாமையும், வெறுப்பும் இன்றி ரசிகர்கள் இரண்டு படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, தற்போது துணிவு – வாரிசு மோதல் குறித்து விஜய் பிரபல நடிகர் ஷாமிடம் போனில் கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஷாம், போன் மூலம் விஜய்யிடம் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்போது விஜய் மிகவும் சந்தோஷமாக… “ஏய் ஜாலிப்பா வரட்டும் பா… அவரும் நம்ப நண்பர் தானே! அந்த படமும் நல்லா போட்டும் நம்ப படமும் நல்லா போட்டும் என மிகவும் பாசிட்டிவாக கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக, விஜய்யின் இந்த பண்பு அவரின் உயர்ந்த உள்ளத்தை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.