என்னது விஜய் சூப்பர் ஸ்டாரா.. கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் : பிஸ்மிக்கு பகிரங்க மிரட்டல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 8:35 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர்.

விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதை அடுத்து துணிவு படத்தின் பாடல்கள் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததோடு துணிவு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் போர் இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் இரு படங்களின் பாடல்களும் நன்றாகவே இருக்கிறது என்பது தான் உண்மை
இதற்கிடையே வாரிசு படத்தின் விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பற்ற வைத்தார். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்றவைத்தது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார் சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி. இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த அவர், “தற்போதைய சூழலில் வசூல் ரீதியாக பார்க்கும்போது விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மக்கள் விஜய் அந்த இடத்தில் எப்போது வைத்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். மேலும் ரஜினி என்ன என்ன சாதனைகள் படைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் பிஸ்மிக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் சூப்பர் ஸ்டார் விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் பிஸ்மியின் வீட்டுக்குச் சென்று ரஜினி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிஸ்மி வீட்டில் இருந்தபோது நேரடியாகவே அவரது வீட்டுக்குச் சென்ற ரஜினி ரசிகர்கள் எப்படி நீங்கள் ரஜினிகாந்த்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் எனக் கூறலாம் என கண்டனம் தெரிவித்ததோடு நீங்கள் பேசிய வீடியோக்களை யூட்யூப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ரஜினி ரசிகர்கள் தற்போது திடீரென அஜித் விஜய் இடையிலான மோதலுக்குள் புகுந்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது பிஸ்மியை அவர்கள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…