ஒரு நைட்க்கு எவ்ளோ வேணும்னாலும் தரேன்.. வெறிப்பிடித்த நாய்கள் மாதிரி.. கொந்தளித்த பனிமலர்..!
Author: Vignesh15 March 2024, 10:06 am
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.
எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள அவர், எப்போதும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பனிமலர் ஒரு கடை விழாவுக்காக சிலர் என்னுடைய டீம்மிடம் பேசினார்கள். அதில், அவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குவீங்க, ஒரு லட்சம் தரவோம், அவங்க கூட தங்க சொல்லுங்க என்று அந்த நபர் பேசினார்.
உடனே என்னுடைய டீம் மெட் ஃபோனை கட் செய்து விட்டு பிளாக் செய்து விட்டார்கள். இந்த மாதிரி தொடர்ந்து பெண்களுக்கான மோசமான பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னொருவர் இரவு நேரத்தில் வீடியோ கால்கள் தேவையில்லாத மெசேஜ்களை செய்து வந்தார். அந்த வீடியோ கால் ஒன்றை அட்டென்ட் செய்தால் நிர்வாணமாக நின்று இருக்கிறார்கள் என்று பனிமலர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களில் வந்து அதைக்காட்டு, இதைக்காட்டு, போட்டோ அனுப்பு என வெறிப்பிடித்த நாய்கள் மாதிரி திரிகிறார்கள். அப்படி, விரக்தியாக இருக்கிறார்கள் என்றால், இதற்கென்று நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் தாராளமாக பணம் கொடுத்து போங்க உங்கள் இஷ்டம். உங்களுக்கு வக்கு இருந்தால் முறையாக காதலி திருமணம் செய்து எவையாவது செய்யுங்கள்.
ஊரில் இருக்கும், பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும், பொதுத்தளத்தில் அசிங்கமாக பேசும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு வளர்ந்து விட்டது உங்களை தூக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். வக்கிரம் பிடித்த ஆண்களிடம் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று பனிமலர் பதிலடி கொடுத்துள்ளார்.