‘எப்போ சார் கல்யாணம்’.. கோர்த்துவிட்ட KS ரவிக்குமார்.. மன வருத்தத்துடன் பேசிய தியாகராஜன்..!(Video)

Author: Vignesh
17 August 2024, 12:00 pm

அந்தகன் படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடாமல் ஒருவாரம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இந்நிலையில், அந்தகன் படம் வெற்றி பெற்றால் பிரசாந்த் திருமண பேச்சை எடுக்கிறேன் என சொன்னீர்கள் பிரசாத்துக்கு எப்ப சார் திருமணம் செய்வீர்கள் என கே எஸ் ரவிக்குமார் நிகழ்ச்சியில் மைக்கு முன்னாடி வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

உடனடியாக, மைக்கை பிடித்த தியாகராஜன் தனக்கும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயமே பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்பதுதான். அடுத்த பட வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது அடுத்த வேலையை எனக்கு தியாகராஜன் வருதத்துடன் கூறியுள்ளார்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?