கடைசியா எப்போ 8 மணிநேரம் தூங்குனீங்க…? லோகேஷ் சொன்ன பதில் கொஞ்சம் கேளுங்க!

Author: Shree
17 October 2023, 11:59 am

தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.

தற்போது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது, சினிமா திரைத்துறை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. விஜய்க்கு அரசியல் வட்டாரத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அதான் ஆடியோ லான்ச் கேன்சல் செய்துவிட்டதாகவும் பேச்சுக்கள் பேசப்பட்டது.

ஆனால் சிறப்பு காட்சிகள் மட்டும் அதிகாலை கட்சிகளுக்கு அனுமதி கேட்டிருந்த கடிதத்திற்கு பதில் அளித்திருந்த தமிழக அரசு, அந்த அறிக்கையில் ” தளபதி விஜய்” என வாசகம் எழுதியிருந்ததால் ஆளுங்கட்சிக்கும் விஜய்க்கும் எந்த வெறுப்பும் இல்லை என்பதை மறைமுகமாக தெளிவுபடுத்தினர். நாளை மறுநாள் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது கடைசியாக நீங்க எப்போ 8 மணி நேரம் தூங்கினீங்க என கேட்டதற்கு, ” லியோ படத்தின் சென்சார் நிறைவடைந்தவுடன்தான் நான் 8 மணிநேரம் நிம்மதியாக தூங்கினேன் என லோகேஷ் கனகராஜ் கூறினார்.

லியோ படம் ஆரம்பித்த முதலே மிகுந்த அழுத்தத்தோடு ரெஸ்ட் இல்லாமல் வேலை செய்தேன். சிறப்பாக படத்தை அமைக்கவேண்டும் என்பதிலே முழு கவனமும் இருந்தது. இதுபோன்ற செயலை என்னுடைய அடுத்த படமான ரஜினிகாந்தின் தலைவர்171 படத்தில் செய்யப் போவதில்லை. அப்படத்தை மிகவும் ரிலாக்ஸாக சிறப்பான முறையில் எடுக்கவேண்டும் என முன்னதாகவே திட்டமிட்டு களத்தில் இறங்குவோம். மேலும் தலைவர் 171 கதையை கேட்டதும் சூப்பர் ஸ்டார் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

  • Ajith Kumar team 3rd place in dubai car race நம்ம ஜெயிச்சுட்டோம் நண்பா…ஆனந்த கண்ணீரில் அஜித்…துபாய் 24H கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் அணி..!