சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. முதல் நாளிலேயே படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காமல் பலரும் கடுப்பாகி உள்ளனர். அந்த அளவுக்கு டிக்கெட் புக்கிங் ஒரு வாரத்துக்கு ஏகப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டன.
பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸை செம ட்விஸ்ட் உடன் முடித்து அதன் 2ம் பாகத்திற்கு ரசிகர்களை வெறித்தனமாக வெயிட் செய்ய வைத்துள்ளார் மணிரத்னம்.
2 பாகங்களும் ஓவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் ஒரே மூச்சில் 150 நாட்களுக்குள் முடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு அதிகம் செலவு செய்யாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். சிறப்பான நடிகர்கள் தேர்வு காரணமாக இத்தனை வேகமாக இரண்டு பாகங்களும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ஆதித்த கரிகாலனை வைத்து கிளைமேக்ஸ் முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் சத்தமே இல்லாமல் டைட்டில் கேரக்டரை வைத்து முடித்திருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் என அனைவரது நடிப்பும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. 2வது பாகம் எப்போ முதல் பாகத்தின் அந்த பயங்கர கப்பல் காட்சி சண்டை கிளைமேக்ஸ் முடிந்ததும் நிலவும் அமைதியுடன் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டே வெளியாகும் என்கிற சந்தோஷ செய்தியையும் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்மர் விடுமுறை கொண்டாட்டமாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ளது. வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சிறு குறைகள் இருந்தாலும், பெரிய அளவில் இயக்குநர் மணிரத்னம் எங்கேயும் சொதப்பிடவில்லை.
சோழர்களின் வரலாற்றை அப்படியே திரையில் படமாக காட்டியிருக்க நிறையவே அவர் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் சிஜி சொதப்பல்கள் இருந்தாலும், இலங்கையில் இருந்து அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் திரும்பி வரும் கப்பல் சண்டைக் காட்சிகளில் சிஜி மிரட்டுகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.