வீட்டு லோன் கட்ட காசு இல்ல… அதுக்கு தான் நடிக்க வந்தேன் – பிரியா ஆனந்த் பளீச்!

Author:
1 August 2024, 2:05 pm

சென்னை சேர்ந்த தமிழ் பெண் ஆன பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக இவர் பார்க்கப்பட்ட வருகிறார் .

இவர் முதன் முதலில் “வாமனன்” திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகியது. அதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா , இரும்பு குதிரை உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

priya anand-updatenews360

இதனிடையே ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார் நடிகை பிரியா ஆனந்த். இந்நிலையில் பிரியா ஆனந்த் தற்போது பிரசாந்த் நடித்துள்ள “அந்தகன்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில் தற்போது பிரியா ஆனந்திடம் சமீபத்திய பேட்டி ஒன்றில், “காசுக்காக வேற ஏதாச்சும் வேலை பார்த்து இருக்கீங்களா? என கேள்வி கேட்டதற்கு இதைவிட அதிகமா காசு எங்கு தராங்க சொல்லுங்க?

நான் காசுக்காகவே ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த நேரத்தில் வீட்டுக்காக வாங்கிய லோன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் நான் தள்ளப்பட்டேன். அதனால் படத்தின் கதையை கூட கேட்காமல் அந்த படத்தில் கமிட்டாகி நடித்துக் கொடுத்தேன் என பிரியா ஆனந்த் சினிமா துறையில் தான் அதிகம் சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 242

    0

    0