அதிகமா பேசப்பட்டது துணிவு.. வசூலில் வென்றது வாரிசா? துணிவா? ரவீந்தர் சந்திரசேகரன் கூறியது இதுதான்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 6:33 pm

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை ‘துணிவு’ வசூலித்ததாக தகவல் வெளியாகியானது. தமிழ்நாட்டில் படம் அடுத்த சில நாட்களில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக அளவில் படம் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டு படங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றன.

இந்த நிலையில் விமர்சகரும், FAT MAN என அழைக்கப்படும் ரவீந்திரன் அவர்கள், தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிகமாகப் பேசப்பட்ட படம் துணிவுதான் ஆனால் வசூலில் வாரிசு முந்தியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் பொறுத்தவரையில் வணிக ரீதியாக வாரிசு வசூலில் முந்தியுள்ளது என்றும், வெளிநாட்டிலும் வாரிசு தான் வருமானத்தை ஈட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், கேரளா, வெளிநாடுகளில் அஜித் – விஜய் என்று கிடையாது, தமிழகத்தில் மட்டும்தான் அஜித் விஜய் போட்டியுள்ளது. அந்த வகையில் வாரிசுதான் வருமானத்தில் அதிகமாக உள்ளது.

பார்வையாளர்களை கவருவதில் விஜய் வேற லெவல் என்றும், அஜித் சார் தமிழகத்தில் மட்டும்தான் தன் பார்வையை வைத்துள்ளதார் என்றும் கூறியுள்ளார்.

தனது படங்களில் இசைக்கு முக்கியத்துவம் என்பதில் விஜய் எப்போதும் கவனம் செலுத்துவார். ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் கொடுத்தது குழந்தைகளை கவர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  • Ajithkumar's Vidaamuyarchi Twitter review Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!