அசின் உடன் நடிக்கும்போது… கேரவன் பின்னால் சென்று விஜய் செய்த செயல் – பார்த்து ஷாக் ஆன பிரபு தேவா!

Author: Shree
3 October 2023, 2:17 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 2007 ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். மாபெரும் ஹிட் அடித்து வசூலில் பட்டைய கிளப்பிய இப்படம் விஜய்யின் மிகமுக்கிய வெற்றிப்படங்களில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இப்படத்தில் விஜய்க்கு நிகராக வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது மேலும் படத்திற்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் செய்த விஷயம் ஒன்று தற்போது பல வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் – அசின் இருவரின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது விஜய் அடிக்கடி கேரவன் பின்னால் சென்று வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட பிரபு தேவா தனது அசிஸ்டென்ட்டை அனுப்பி விஜய் கேரவன் பின்னல் போய் என்ன செய்கிறார் என்று பார்த்திட்டு வா என அனுப்பினாராம்.

அப்போது விஜய் வாந்தியெடுத்துக்கொண்டு இருந்ததை பார்த்து பதறிப்போன படக்குழு என்ன ஆச்சு? என கேட்ட பின்னர் உடல்நிலை சரியில்ல கடுமையான காய்ச்சல் என கூறினாராம். உடனே ஷூட்டிங் கேன்சல் பண்ணுங்க என பிரபு தேவா சொல்ல.

அயோ அதெல்லாம் வேண்டாம் நான் ஓகே… அதுக்காக தான் இதெல்லாம் சொல்றதே இல்ல என கூறி அந்த பாடல் காட்சியை சிறப்பாக முடித்து கொடுத்தாராம். விஜய் ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் தன்னால் எந்த ஒரு காரணத்தாலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு கஷ்டம் வந்திடக்கூடாது என நினைப்பவர் என பிரபு தேவா என கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ