மகள் தற்கொலைக்கு காரணம் யார்…? phone’யை ஆய்வுசெய்யும் போலீஸ்!

Author: Shree
19 September 2023, 10:07 am

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பிலும் , இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனி பாத்திமா என்ற பெண்ணை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு “மீரா” என்ற 16 வயது மகள் இருக்கிறார். இவர் சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படுத்து வந்த நிலையில் மன உளைச்சசல் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரது உடல் காவேரி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு சிகிச்சை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து அவரது மரணத்திற்கு என்ன காரணம். யார் யாரெல்லாம் அவரது மரணத்தில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். அவரது நண்பர்கள், செல்போன், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார். பிரேத பரிசோதனைக்கு பின் சரியாக 10 மணிக்கு விஜய் ஆண்டனியிடம் மகளின் உடல் ஒப்படைக்கப்படும் என செய்திகள் கூறுகிறது. அதன் பின்னர் சரியாக 12 மணிக்கு மீராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?