நயன்தாரா குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது இவருதான்? வெளியான பரபரப்பு தகவல்..!

Author: Vignesh
12 October 2022, 6:45 pm

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Nayanthara-Twins-4-Updatenews360

விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.

nayanthara_updatenews360

வாடகைத்தாய் மூலமாக திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு எப்படி 4 மாதங்களில் பெற்றோர்கள் என சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது யார் என்கிற விவரம் தற்போது வெளியே கசிந்திருக்கிறது.

nayanthara_updatenews360

கேரளாவில் உள்ள நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த விஷயம் பற்றி முடிவெடுத்து இரண்டு குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறாராம் நயன்தாரா.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 705

    0

    0