தீபாவளி வின்னர் இவருதான்… அப்போ சிவகார்த்திகேயன் இல்லையா? புது டுவிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 1:40 pm

இந்த வருட தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் மற்றும் துல்கரின் லக்கி பாஸ்கர் என 4 படங்கள் வெளியானது.

இதில் லக்கி பாஸ்கர் நேரடி தெலுங்கு படம் என்றாலும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக அமரன் திரைப்படம் உண்மைக்கதை என்றாலும் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் எஸ்கே வாழ்ந்துள்ளார். படத்தில் குறைகளே சொல்லமுடியாத அளவில் படத்தை செதுக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

தற்போது வரை ரூ.150 கோடி வரை வசூலிக்கப்பட்டு வெற்றி நடைபோட்டுள்ள நிலையில், லக்கி பாஸ்கர் படமும் குறிப்பிட்ட வெற்றியை தாண்டி ஹிட் அடித்துள்ளது.

இதையும் படியுங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் : அதிர்ச்சி காட்சி!

இந்த வருட தீபாவளியில் உண்மையில் வின்னர் யார் என்றால், சிவகார்த்திகேயனும் அல்ல துல்கரும் அல்ல அது ஜிவி பிரகாஷ்தான் என ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ்தான் படம் வெற்றியடைய முழு காரணம் என்பதால் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!