பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் கடந்த வாரம் திடீர் மரணமடைந்தது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து நெற்றியில் அடிப்பட்டு தான் இறந்தார் என தெரியவந்தது.
மேலும் தனியாக வசித்து வந்த வாணியம்மாவின் கணவர் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாககவும், அவருக்கு தினமும் யாராவது கால் பண்ணி செல்போனில் பேசிக் கொண்டிருப்பார் என பணிப் பெண் தகவல் தெரிவித்திருந்தார்.
வாணியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை என்பது அறிந்த விஷயமே. ஆனால் தற்போது நான் தான் அவரது மகள் என பிரபல செய்திவாசிப்பாளர் ரத்னா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி வாசிப்பாளரான ரத்னா, பிரபல தொலைக்காட்சியில் திரை விமர்சனம் தொகுத்து வழங்கியவர்.
90ஸ் கிட்ஸ்க்கு மத்தியில் பிரபலமான செய்தி வாசிப்பாளரான ரத்னாவும் வாணியம்மாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இது குறித்து செய்தி வாசிப்பாளர் ரத்னா பேசும் போது, எந்த குழந்தைகளாக இருந்தாலும், தனது குழந்தையாகவே பார்த்து கொள்வார் வாணியம்மா. எங்கு போனாலும் என்னையும் கூட அழைத்து செல்வார்.
வீட்டில் கொலு பொம்மை வைக்கும் போது என்னை அழைப்பார். இப்படியே எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் எனக்கு அம்மா மாதிரி, சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவித்த போதும் கூட அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்.
அப்போது உடம்பு நல்லாதான் இருக்கு, கொஞ்சம சளி இருக்கு என கூறியுள்ளார். மேலும் வாணியம்மா தனது புடவைகளை எனக்கு தருவார், அதை உடுத்திக் கொண்டு செய்தி வாசித்துள்ளேன் என ரத்னா கூறியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.