‘காதல்’ படத்தின் முதல் சாய்ஸ் சந்தியா இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!(வீடியோ)
Author: Vignesh30 March 2024, 2:34 pm
கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பரத் மற்றும் சந்தியா நடித்த காதல் திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. காதல் படத்தில், நடிக்கும் போது நடிகை சந்தியா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு அதுவே முதல் படம். ஆனால், முதல் முதலில் காதல் படத்தில் நடிக்க வந்தது சரத்குமாரின் மகளான வரலட்சுமி தானாம். வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற போது சரத்குமார் இதற்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், வரலட்சுமி இந்த ஹிட் திரைப்படத்தின் பொன்னான வாய்ப்பை இழந்துள்ளார். இது குறித்து, அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.