பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயரு.. அனல் பறக்கும் சில்லா.. சில்லா… : இவரை தாக்கி எழுதப்பட்ட வரிகளா?

Author: Vignesh
10 December 2022, 5:40 pm

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற பிரபல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் எச் வினோத். வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களைத் தொடர்ந்து, 3வது முறையாக அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு.

Ajithkumar_Updatenew360

அஜித், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக, இப்படத்தின் இயக்குனர் பல பெட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இயக்குநர் அளித்துள்ள பேட்டியில், துணிவு படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பஞ்சாப் வங்கிக் கொள்ளை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையில்லை, துணிவு படத்தின் கதை ஒரு கற்பனைக்கதை.

HVinoth_Updatenews360

துணிவுத் திரைப்படத்தை குடும்பத்தோடு அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். பல அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். சண்டை காட்சியின் போது அவரது முட்டி வீங்கி விட்டது, ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதே போல படத்தின் நாயகியாக வரும் மஞ்சு வாரியர் அஜித்தின் காதலி இல்லை, அவர் அஜித் குழுவில் ஒருவராக நடித்துள்ளார்.

Ajithkumar_Updatenew360

அஜித்துடன் பணியாற்றியது இனிய அனுபவம். எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், சக மனிதர்களை எப்படி மதிப்பது, விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படி, என்பதை அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். துணிவுத் திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும், அவரது ரசிகர்களை கவரும் வகையில் சுவாரஸ்யமான பல காட்சிகள் உள்ளது’ என கூறியுள்ளார்.

சமீபகாலமாக அனிருத் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் அனிருத் பாடும் பாடல்களும் வெறித்தனமாக ஹிட் அடித்து வருகிறது அந்த வகையில் துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலை அனிருத் பாடி வெற்றி பெற்றுள்ளார்.

thunivu_updatenews360

வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படமாக திரையரங்கிற்கு வர இருக்கிறது, அதேபோல் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அஜித் விஜய் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ள இருப்பதால் ரசிகர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்தநிலையில் சில்லா சில்லா பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள் அந்த வகையில் சில வரிகள் யாரை தாக்கி எழுதப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ சில்லாச்சில்லா பாடலில் சில வரிகள்…

உள்ளுக்குள்ள ஃபயறு எரிச்சு ஓட்டு ஃபியரு பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயர், மத்தவன மட்டம் தட்டி மேல வந்தா நோ யூஸ், கத்துறவன் கத்தட்டுமே கட்டி விடு டைம் பாஸ், வந்தா என்ன போனா என்ன யாரு என்ன சொன்னா என்ன தகிட தகிட தகிட…

திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹெட் தான்..

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 693

    31

    1