தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.
இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆகி உள்ளது. அது என்னவென்றால், தற்போது இந்த படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை கொண்டு வர இருக்கிறார்கள்.
இந்த நிலையில், விஜய் சினிமா துறையை விட்டு விலகுவதால் பல நூறு கோடி சினிமா துறைக்கு நஷ்டம் ஏற்படும் என ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் என பலரும் விஜய் குறித்து பேசி வருகிறார்கள். அந்த இடத்தை பிடிக்க போவது யார் என்ற விவாதம் மற்றொரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் விஜய் அண்ணாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.