ஆரி I am Very சாரி : தலைதெறிக்க ஓடும் இயக்குனர்கள்.. பட வாய்ப்பு குறைய காரணமே இதுதான்!!!

Author: Vignesh
4 April 2023, 5:30 pm

பிக் பாஸ் 4ம் சீசனில் நடிகர் ஆரி போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர். நடிகர் ஆரி பிக் பாஸ் மூலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதற்கு பிறகு நடிகர் ஆரி அதிகம் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு படம் கூட அவர் ஹீரோவாக நடித்து பிக் பாஸுக்கு பிறகு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு ஆரிக்கு பல இயக்குனர்கள் கதை சொல்ல போனார்களாம், ஆனால் ஆரி அந்த கதைகளில் அதிகம் மாற்றங்கள் செய்ய கூறியதாக தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், படத்தின் வசனங்கள் உள்ளிட்ட பல விஷயங்களிலும் நடிகர் ஆரி மாற்றம் செய்ய சொன்ன மாற்றங்கள் அதிகம் இருந்ததால் பல இயக்குனர்கள் தலைதெறிக்க ஓடிவந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Aari Arujunan-updatenews360

இதனால், படிப்படியாக ஆரியை தேடிவரும் வாய்ப்புகள் குறைய, தற்போது நடிகர் ஆரி எந்த படமும் கைவசம் இல்லாமல் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 528

    0

    0