இதனால தான் அம்பானி மகன் திருமணத்திற்கு போகல.. நடிகை டாப்ஸி கொடுத்த விளக்கம்..!

Author: Vignesh
17 July 2024, 12:48 pm

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

ambani

மேலும் படிக்க: சொகுசு கப்பலில் திருமணம்.. மகன் திருமணத்திற்காக ‘அந்த’ விஷயத்தை செய்யும் நெப்போலியன்..!

முன்னதாக, இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். தற்போது, இந்தியாவின் ஹார்ட் டாப்பிக்காகவே மாறும் அளவிற்கு இவர்களது திருமண கொண்டாட்டங்கள் பேசுபொருளாக உள்ளது.

ambani

மேலும் படிக்க: அப்படி போகனுமா?.. அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த இரண்டு பேர் கைது..!

சுமார் 5 ஆயிரம் கோடி வரை இந்த திருமணத்திற்காக அம்பானி செலவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதோடு, திருமணத்திற்கு வந்த பிரபலங்களுக்கு ரிட்டன் கிப்டாக ரெண்டு கோடி மதிப்பிலான வாட்ச் தந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொள்ளாதது குறித்து நடிகை டாப்ஸி பேட்டி ஒன்றியம் தெரிவித்துள்ளார்.

taapsee pannu

அதில் அவர் பேசுகையில், எனக்கு அம்பானி குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இல்லை. திருமணம் என்பது உறவுகளுடன் கூடியது விருந்து கொடுக்கும் குடும்பத்தினருக்கும் விருந்தினர்களின் குடும்பத்திற்கும் இடையே ஒரு பந்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான திருமணங்களுக்கு தான் நான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu