‘கேம் சேஞ்சர்’ தோல்விக்கு பிரபுதேவா தான் காரணம்..இசையமைப்பாளர் தமன் அட்டாக்.!
Author: Selvan20 March 2025, 2:00 pm
கேம் சேஞ்சர் திரைப்படம் தோல்வியடைந்தது ஏன்?
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்,நடிகர் ராம் சரண்,கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.
இதையும் படியுங்க: என் உடலை தானம் செய்கிறேன்..ஆனால் ‘இதயம்’..ஷிஹான் ஹுசைனி உருக்கமான வேண்டுகோள்.!
450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான முதல் நாளிலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்து,பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை அடைந்தது.

படம் வெளியான பிறகு,திரைக்கதையில் இயக்குனர் ஷங்கர் பல இடங்களில் கோட்டை விட்டுள்ளார் என்ற குற்றசாட்டுகள் எழுந்தன.மேலும் சுமார் 5 மணிநேரத்திற்கு பட காட்சிகளை படமாக்கியிருந்தார்.ஆனால்,படத்தின் நீளத்தை குறைக்க இரண்டரை மணிநேரம் மட்டுமே படத்தில் இடம்பெற முடிந்தது.இதனால், பல முக்கியமான அறிவுசார் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் நீக்கப்பட்டதாகவும்,அதுவே படம் தோல்வியடைய காரணமானதாகவும் கூறப்பட்டது.
100 கோடி செலவில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.ஆனால்,பாடல்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை,இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன்,இப்படம் தோல்வியடைய காரணம் பாடல்களும்,குறிப்பாக நடனக் கோணமும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது “கேம் சேஞ்சர் படத்தில் ஹூக் ஸ்டெப் இல்லாததே ஒரு பெரிய குறையாக அமைந்தது” ஒரு பாடலில் ஹூக் ஸ்டெப் இருந்தால்,அந்த பாடல் மக்கள் மத்தியில் எளிதாக பிரபலம் ஆகிவிடும் என்று குறிப்பிட்டார்.
‘ஜருகண்டி’ பாடலுக்கு பிரபுதேவா தான் நடன இயக்குனராக இருந்தார்.தமன் அவரை சூசகமாக விமர்சிக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மொத்தத்தில் படம் தோல்வியால் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதே மிச்சம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
