கமல் அத்துமீறினாரா? கௌதமி மகளை பாதுகாக்க தான் அந்த முடிவா? குண்டை தூக்கிப் போட்ட பயில்வான்..!
Author: Vignesh7 November 2023, 12:22 pm
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.
அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். இப்படி கமல் ஹாசனை பற்றி பல கிசு கிசு, விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறியும் அவர் உலக திரையில் உலக நாயகனாகவும், ரசிகர்கள் மனதில் ஆண்டவராகவும் இருக்கிறார்.
கமலின் பிறந்த நாளான இன்று பல்வேறு ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், ஹட்டர்களும் அவர் குறித்து நெகட்டிவ்வான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதாவது பிக் பாஸ் பிரதீப் ரெட் கார்டு முதல் தற்போது வெளியான அவரது 234வது படமான Thug Life படம் வரை பலர் கலாய்த்தபடி கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதில் பயில்வான் கமல் கௌதமி பிரிந்த விஷயம் குறித்து பேசியதையும் வைரலாக்கி வருகிறார்கள். 13 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த கவுதமி கமலிடம் இருந்து மகளை பாதுகாக்க தான் பிரிந்து விட்டார் என்று குறிப்பிட்டதை பயில்வான் மீண்டும் நினைவுப்படுத்தி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.