பிரேம்ஜி கல்யாணத்திற்கு வராத இளையராஜா.. தம்பி மகனுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா?..
Author: Vignesh11 June 2024, 8:32 pm
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களது மகனும் பிரபல நடிகருமான பிரேம்ஜி நிறைய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிம்பு மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், இதனைத் தொடர்ந்து, சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார்.
மேலும் படிக்க: ரூ.80 கோடி சொத்துக்களை கோவிலுக்கு கொடுத்துட்டாங்க.. சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா?..
‘என்ன கொடுமை சார் இது? , எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா?’ உள்ளிட்ட டயலாக்குகள் மூலம் இவர் பேமஸ். திரைப்படங்கள், வெப் சீரீஸ் உள்ளிட்டவைகளில் நடித்து வரும் இவர், சில பாடல்களும் பாடியுள்ளார். இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க: அட ஆச்சரியமா இருக்கே.. காஞ்சனா 4-ல்இவங்கதான் ஹீரோயினா?.. வைரல் பதிவு..!
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சில ஆண்டுகளுக்கு முன் பாடகி ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டநிலையில், தற்போது பிரேம்ஜிக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!
சினிமா சம்பந்தம் இல்லாத பெண்தான் இந்து என்று வெங்கட்பிரபு கூறி இருந்தார். இதனை தொடர்ந்து, சிறப்பாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இளையராஜா வராமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில், இளையராஜா வராத காரணம் என்ன என்ற தகவலை சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தற்போது தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொண்டுள்ள பெண் பிரேம்ஜிக்கு Instagram ல் அறிமுகம் ஆகி பின்னர், காதல் திருமணமாக மாறி இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் சைவத்திற்கு மாறி இருக்கிறார். முன்னதாக, இளையராஜா தம்பி மகனை திருமணத்திற்கு முன்பே வீட்டிற்கு வரவழைத்து விருந்து கொடுத்து பரிசையும் வழங்கி இருக்கிறார். வெளிநாட்டில் நடக்கும் கான்செப்டில் இருப்பதால் தான் இளையராஜாவால் திருமணத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது என்று பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.