தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
குஷ்பு சுந்தர் சியை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் பிரபுவை காதலித்து வந்தது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். ஆனால், அந்த காதலுக்கு சிவாஜி கணேசன் எதிர்ப்புகள் தெரிவித்ததால் பிரேக் செய்துக்கொண்டனர். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தார் குஷ்பு.
பிரபு குஷ்பு இருவருமே உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். பெற்றோர்கள் சம்மதிக்காததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இதனால் சிவாஜி குடும்பத்தின் பெயர் பொதுவெளியில் மோசமாக விமர்சிக்கப்பட்டது. அந்த சமயத்தில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனையே வெடித்ததாம்.
அதுமட்டும் இல்லாமல் குஷ்பு வேறு மதத்தை பின்பற்றுபவர் என்பதால் சிவாஜி அவரை மருமகளாக ஏற்றுக்கொள்ளவே முடியாது என கூறிவிட்டாராம். வேறு வழியே இல்லாமல் பிரபு குஷ்புவை பிரிய மனமில்லாமல் பிரிந்துவிட்டாராம். இதனால் சில வருடங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குஷ்பு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியில் வந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னர் சுதந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாக, டாக்டர் காந்தராஜ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிழல்கள் ரவி தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில்,2000ஆம் ஆண்டு…
கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும்…
நிகழ்ச்சியில் நேர்ந்த மோசமான அனுபவம் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி,காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப்…
ஈரோடு நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். ஈரோடு: சேலம்…
விசில் போடு – CSK-வின் அடையாளம் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்,தொடர்ந்து பல ஹிட் பாடல்களை…
அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார் என தவெக ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக தமிழக…
This website uses cookies.