மூட்டை தூக்குனேன்… செத்தே போயிட்டேன் : சீரியலை விட்டு விலகிய மெட்டி ஒலி செல்வம்!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2024, 4:47 pm
இல்லத்தரசிகள் மற்றும் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான சீரியல் என்றால் அதிக எண்ணிக்கையில் சீரியல்களை சொல்லலாம்.
அந்த காலத்தில் குடும்பம் குடும்பமாக டிவி முன் அமர்ந்து பார்த்த சீரியல்கள் ஏராளம் உண்டு. அப்படி ஒரு சீரியல் என்றால் அது மெட்டி ஒலிதான்.
தாய் இல்லாமல், தந்தை அரவணைப்பில் வாழும் 5 சகோதரிகளின் கதையை அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் எடுத்திருந்தார் இயக்குநர் திருமுருகன்.
இதையும் படியுங்க: விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்… சந்தோஷத்தில் சமந்தா : பாராட்டி தள்ளிய ரஜினி!
அந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்த விஸ்வா தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் சீரியல் விட்டுப் போக காரணமே, மெட்டி ஒலி மாதிரி அடுத்த ஒரு சீரியல் வந்தால் போகலாம் என காத்திருந்ததாகவும், பல வேலைகள் இருந்ததால் என்னால் சீரியலில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, சீரியல் வாய்ப்பு இல்லாமல் நான் மூட்டை தூக்குறேன், செத்துப் போயிட்டேன் என யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.