சப்ப காரணத்தால் அந்த படத்தை தவறவிட்ட பிரசாந்த்.. அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

Author: Vignesh
6 July 2024, 6:14 pm

தமிழ் திரையுலகில் விஜய் – அஜித்தை விட 90ஸ் காலகட்டத்தில் டாப்பில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், ஆரம்ப காலகட்டங்கள் முதல் நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

ஐஸ்வர்யா ராய், ஷாலினி, சிம்ரன், ஜோதிகா என டாப் ஹீரோயின்கள் ஜோடியாக நடித்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த இவர், திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனதற்கான ஷாக்கிங் காரணம் இதுதானாம். அதாவது அவருடைய திருமண வாழ்க்கை தான் காரணம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக, காதலை மையப்படுத்தி வெளிவந்த படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ராஜுமேனன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மம்முட்டி அஜித் மற்றும் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

prashanth

படத்தின் கதை நடிகர்களை தாண்டி ஏ ஆர் ரகுமானின் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில், அஜித் ரோலில் முதலில் நடிக்க வைக்க பிரசாந்த்திடம் தான் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில், ஜீன்ஸ் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால், பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் அந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை ஜோடியாக போடுங்கள் என கூறினாராம். ஆனால், படத்தின் கதைப்படி பிரசாந்துக்கு ஜோடி தபுதான் ஐஸ்வர்யா ராய் எல்லாம் முடியாது என இயக்குனர் சொல்லி இருக்கிறார். இதனாலேயே, பிரசாந்த் இந்த படத்தில் இருந்து விலகினாராம்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 217

    0

    0