கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
இதனிடையே தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து, படம் வருகிற ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில், தன் முன்னாள் மனைவி இயக்கத்தில் வெளியான லால் சாலம் படத்தின் டிரைலரை பார்த்து நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் எப்போதும் போல் அவரது தலைவர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். படக் குழுவினருக்கு வாழ்த்து என்று கூறி சூப்பர் ஸ்டார் தலைவா என்ற டேக்கையும் பதிவிட்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தநிலையில், ஐஸ்வர்யா பெயரை குறிப்பிடாமல் இருந்தது சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், லால்சலாம் இசை வெளியீட்டு விழாவில், பேசிய ரஜினி தான் எப்போதும் பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றி பழகிவிட்டதால், மகள் இயக்கத்தில் நடிக்க முதலில் தயங்கினேன் எனக் கூறியிருக்கிறார். மேலும், கோச்சடையான் படத்தில் நடிக்கும் போது சௌந்தர்யாவுக்கு பதில் கே எஸ் ரவிக்குமார் வந்துதான் ஆக்சன் கட் சொல்ல வேண்டும் என கூறியதாகவும், மேலும், தனுஷ் எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார். ஆனால், நான் சொன்ன காரணத்தை அவர் புரிந்து கொண்டார் என ரஜினி தெரிவித்திருக்கிறார். மேலும், லால் சலாம் படத்தில் தானே கேட்டு நடித்ததாகவும் ரஜினி கூறியுள்ளார்.
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
This website uses cookies.