சீரியலில் இருந்து விலகிய ரித்திகா: இனி பாக்கியலட்சுமி தொடரில் இவருக்கு பதில் இவரா?..
Author: Vignesh22 August 2023, 5:30 pm
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமாகியுள்ளார் ரித்திகா. இவர் நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.
இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அமிர்தா மாற்றப்பட்டுள்ளதாக சில தகவல்கள் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன. அதாவது, பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா விலகியதால் அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் பிரபலமடைந்த அக்ஷிதா அசோக் கமிட்டாக இருப்பதாகவும், ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரம் அடுத்து வில்லியாக மாற இருப்பதால் அவர் வெளியேறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.