சமந்தா வரலையா?.. விஜய் தேவரகொண்டாவிடம் நலம் விசாரித்த முன்னாள் மாமனார்.. எதிர்பாரா ட்விஸ்ட்..!

Author: Vignesh
5 September 2023, 1:00 pm

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் ரிலீஸ் ஆனது.

இதில் சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் ரியல் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளார்கள். சமந்தா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணாக பொய்யாக நடிக்கிறார். அதனை ஹீரோ விஜய் தேவர்கொண்டா கண்டுபிடித்து சமந்தா பேகம் இல்லை பிராமின் பெண் என தெரிந்துக்கொள்கிறார். அதன் பின்னர் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.

ஆனால், சமந்தாவின் தந்தை இருவரின் ஜாதகம் சரியில்லை என்று திருமணத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துகிறார். இதனால் கிட்டத்தட்ட திருமணம் நின்றுபோகிறது. ஆனால், சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் இடையே உள்ள காதலால் பிரிய மனமில்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.

kushi-vijaydevarakonda-samantha

பின்னர் கணவன் மனைவியாக இருவரும் மிகவும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகள், லிப்லாக் சீன் உள்ளிட்டவற்றில் ரியல் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது சின்ன சின்னப்பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் தாண்டி காதல் அவர்களை ஒருங்கிணைக்கிறது. இது அனைத்தும் எல்லோரது லைஃபிலும் கனெக்ட் ஆகும் வகையில் தத்ரூபமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் குஷி ரசிகர்களை செம குஷியாக்கிவிட்டது.

samantha - updatenews360 f

இதனிடையே, இந்தப் படத்தை பட குழுவினர் பலவிதங்களில் பிரமோஷன் செய்து வருகின்றனர். தெலுங்கு பிக் பாஸ் 7 சீசன் தொடங்கிய நிலையில், அதில் பிரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். ஆனால், சமந்தா வரவில்லை. முன்னதாக, நாகார்ஜுனா தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சமந்தாவின் முன்னாள் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay devarakonda-updatenews360

பிக்பாஸ் போனால் அவரை சந்திக்க நேரிடும் என்பதாலேயே சமந்தா வரவில்லை என பேச்சு எழுந்து வருகிறது. சமந்தா பற்றி நாகார்ஜுனா விஜய் தேவரகொண்டாவிடம் ஷோவில் கேட்கிறார். அதற்கு, பதில் சொன்ன அவர் சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிட்டிஸ் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி குஷி ப்ரோமோஷனும் செய்து வருகிறார்’ என விஜய் தேவரகொண்டா தெரிவித்து இருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 377

    0

    0