SK-க்கு கொடுத்த அக்கறை.. கட்டுன புருஷன் மேல இல்லையா? விஜயை சங்கீதா ஒதுக்க இதான் காரணமாம்..!
Author: Vignesh25 October 2023, 12:30 pm
உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
விஜயின் மனைவி சங்கீதா இதுவரை லியோ படத்தினை பார்க்கவில்லை என்றும், ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் தான் வாரிசு ஆடியோ உள்ளாட்சிக்கு வராமல் லண்டன் சென்று விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தை பார்க்க தியேட்டருக்கு சங்கீதா சென்றுள்ளார்.
லியோ படத்தை மட்டும் சங்கீதா ஒதுக்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், த்ரிஷாவுடன் மீண்டும் விஜய் நடித்ததும், படத்தில் லிப் லாக் செய்து இருப்பதாலே சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை விஜய் எந்த படத்திலும் லிப் லாக் காட்சிகளில் சமீப காலமாக நடிக்கவில்லை. த்ரிஷா என்பதால் விஜய்யும் லிப் லாக் காட்சிக்கு ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தான் கோபம் அடைந்து சங்கீதா படத்தை பார்க்க விடவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.