நீ நடிக்க வேண்டாம்…. வரலட்சுமியை அதட்டி சொன்ன சரத்குமார் – சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது ஏன்?

Author: Shree
10 June 2023, 2:09 pm

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வரலட்சுமி குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆரம்பத்தில் வரலட்சுமியை சரத்குமார் நடிக்கவே விடவில்லையாம். தன் மகள் நடிக்க செல்வதில் அவருக்கு விருப்பமே இல்லையாம்.

அவரின் விருப்பத்தை மீறி தான் வரலட்சுமி தற்போது நடித்து வருகிறார். ராதிகாவும் சரத்குமாரின் முதல் மனைவியும் தான் ‘ஒரு படமாவது நடிக்கட்டும்’ என கேட்டு தொந்தரவு செய்தார்களாம். அதன் பின்னர் முதல் படமே பெரிய நடிகர் சிம்புவுடன் என்பதால் வரலட்சுமியின் கெரியர் சிறப்பாக இருக்கும் என நம்பி சரத்குமார் அனுமதித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ