ரஜினிக்கு எதுக்கு பொன்விழா கொண்டாடனும்.. விளாசிய பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2025, 4:31 pm

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த், கூலி, ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

1975ல் ஆபூர்வ ராகங்கள் படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர் தொடர்ந்து 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் 50 ஆண்டு காலமாக சேவையாற்றி வரும் ரஜினிக்கு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் இது குறித்து பேட்டி எடுக்க சென்ற நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ரஜினிக்கு பொன்விழா ஆண்டு நாங்க ஏன் கொண்டாடனும் என எடுத்த எடுப்பில் விளாசியுள்ளார்.

Rajini

மேலும் எம்ஜிஆர், சிவாஜிக்கே நாங்க பொன்விழா ஆண்டு கொண்டாடியதில்லை. ரஜினிக்கு மட்டும் ஏன் கொண்டானும். இதெல்லாம் நடிகர்கள் சங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வி என ஆவசேமாக பேசினார்.

மேலும் சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் மற்றும் சத்யம் தியேட்டர் 50 வருடமாக உள்ளது. அதற்கு யாராவது பொன்விழா கொண்டாடினார்களா? ஏன் தியேட்டர்களுக்கு கொண்டாடக்கூடாதா என நிருபர்களை வளைத்து கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Ajith Kumar car race accident அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
  • Leave a Reply