மும்பை போனதுக்கு இத்தனை கதையா? குழப்பத்தில் சூர்யா ரசிகர்கள்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Author: Hariharasudhan
19 February 2025, 5:14 pm

சூர்யா – ஜோதிகா தம்பதி மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து இருவரும் வித்தியாசமான காரணங்களைக் கூறுவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதனிடையே, சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் படங்களில் படுபிஸியாக நடித்து வருகின்றனர்.

மேலும், இவர்கள் மும்பைக்கு குடும்பமாக குடி பெயர்ந்து விட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலையில், மும்பைக்கு குடிபெயர்ந்தது குறித்து சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், “எங்கள் குழந்தைகளின் படிப்புக்காகத்தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்.

சென்னையைக் காட்டிலும் மும்பையில் அதிகப்படியான சர்வதேசப் பள்ளிகள் இருப்பதால்தான் நாங்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்” எனக் கூறியுள்ளார். அதேநேரம், தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு குடிபெயர்ந்ததாக ஜோதிகா கூறியுள்ளார்.

Suriya Jyotika Living in Mumbai reason

இதனால், இதில் எது உண்மை என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் உடன் ஜோதிகாவுக்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளதாலேயே சூர்யா – ஜோதிகா தம்பதி மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுவதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: மைக் புலிகேசியா நானு? வருண்குமார் ஐபிஎஸ் பாணியில் சீமான் பதில்!

காலில் விழுந்த ஜோதிகா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், சூர்யா கமிட் ஆகியுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க, அவர் வளர்க்கும் காளையையும் சென்னையில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்று வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஜோதிகா நடித்துள்ள Dabba Cartel என்ற இந்தி வெப் தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடரில் பழம்பெரும் நடிகை சபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதனிடையே, நேற்று நடைபெற்ற இதன் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சபானாவின் கால்களைத் தொட்டு ஜோதிகா ஆசி பெற்றது வைரலாகி வருகிறது.

  • Manoj Bharathiraja dared to commit suicide.. Wife saved him தற்கொலை செய்ய துணிந்த மனோஜ்.. காப்பாற்றிய மனைவி : 8 வருடமாக பட்ட கஷ்டம்!