எப்ப வறீங்க?..சரமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்..நொந்து போன ‘மைனா’ பட சூசன்.!
Author: Selvan24 March 2025, 8:08 pm
நேகட்டிவ் விமர்சனங்களால் மனமுடைந்த சூசன்
தமிழ் சினிமாவில் முக்கியமான பாத்திரங்களில் நடித்த சில நடிகைகள் சில படங்களுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மைனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை சூசன் ஜார்ஜ்.
இதையும் படியுங்க: கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!
இவர் திரையுலகில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் குறித்துமூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ளார்.
அதில்,சூசன் மைனா படத்தில் ‘எப்போ வர்றீங்க?’ என்று கணவரை கடுமையாக கட்டுப்படுத்தும் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
சூசன் ஜார்ஜ் மைனா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு,ஒரு திரையரங்கிற்கு சென்றிருக்கிறார்.அப்போது திரையில் அவரை அரிவாளால் வெட்டப்படும் காட்சி வந்ததும்,சில ரசிகர்கள் “வெட்டு நல்லா வெட்டு!” என்று ஆவேசமாகக் கூச்சலிட்டார்களாம்.படம் முடிந்த பிறகு,வெளியே வந்த சூசனை அடையாளம் கண்ட சிலர்,”உன்னையும் அப்படித்தான் வெட்டியிருக்கணும்..கணவர் வேலைக்கு போனால், இப்படியா டார்ச்சர் செய்வது?” என கண்டித்துள்ளனர்.
இந்த சம்பவம் சூசனுக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்ததோடு,அவரை சினிமாவிலிருந்து விலக செய்ய காரணமாக இருந்தது.
மேலும் அவரிடம் சிலர் “மேடம், நீங்க உண்மையிலேயே மது அருந்திக்கொண்டு நடிப்பீர்களா? திரையில் அப்படித்தான் தெரிகிறது!” என கேள்வி கேட்டுள்ளனர்,இதனால் அவர் மிகவும் மனம் உடைந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
நீண்ட காலமாக சினிமாவால் இருந்து விலகி வந்த இவர்,தற்போது கும்கி 2-ல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஒன்றில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.