அந்த படத்திற்காக நம்பி ஏமாந்த விஜய்..! உண்மையை உடைத்த மனோபாலா..!
Author: Vignesh17 February 2023, 5:15 pm
தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் வம்சி பைடிபல்லி அவர்களின் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.
இந்நிலையில், விஜய்யின் கெரியரில் மிக அதிகம் ட்ரோல்களை சந்தித்த படம் சுறா என்று சொல்லலாம். அந்த படத்தின் கதை, காட்சிகள் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது.
விஜய்யின் கெரியரில் தோல்வி படமாக சுறா அமைந்தது. இந்த படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டது ஏன் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்து உள்ளது.
சுறா படத்தில் ஏன் நடிச்சீங்க என விஜய்யிடம் நடிகர் மனோபாலா ஒருமுறை கேட்டாராம். அதற்கு ‘இயக்குனர் கதை சொல்லும்போது சொன்ன மாஸ் வசனங்களை கேட்டு தான் ஓகே சொல்லிவிட்டேன்’ என விஜய் வெளிப்படையாக கூறியதாக நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.