தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா கார்த்தியை வைத்து சிறுத்தை திரைப்படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றார். இப்படத்தின் மூலம் அவர் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் இயக்குனராக வருவதற்கு முன்னரே ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பல துறைகளில் பணியாற்றி இருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படம் இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குனராக முத்திரை குத்தப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து வேதாளம், விவேகம் , விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக சிறுத்தை சிவனின் உடன் பிறந்த தம்பியான பாலா நடித்திருந்தார். இவர் நிறைய மலையாளம் மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இந்நிலையில் பாலா ஒரு அதிர்ச்சிகரான விஷயத்தை கூறி எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாவிற்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாலா தனது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார். அப்போது வீடியோ வெளியிட்ட அவர், உங்கள் அனைவருடைய பிரார்த்தனையால் தற்போது மீண்டு வந்துள்ளேன்.
இருந்தாலும் அடுத்த மூன்று நாட்களில் நான் இறந்து போகலாம். ஆம், மூன்று நாட்கள் கழித்து முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று இருக்கிறது. எனவே நான் மிகவும் மோசமான நிலைக்கு கூட போகலாம். இறந்து கூட போகலாம். ஒரு வேலை உங்கள் பிரார்த்தனையால் பிழைத்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது” என்று பாலா உருக்கமாக கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி பிரார்த்தித்து வருகிறார்கள்.