குக்வித் கோமாளியிலிருந்து ஜி.பி முத்து விலகல்?.. – அவரே கொடுத்த விளக்கம்.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே..!
Author: Vignesh27 April 2023, 5:30 pm
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் ஜிபி முத்து கோமாளியாக வந்து இருக்கிறார். அவர் கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் CWC நிகழ்ச்சிக்கும் வரவில்லை.
மேலும், ஜிபி முத்து இனி குக் வித் கோமாளிக்கு வருவாரா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது ஜிபி தனது உடல்நிலை பற்றி வீடியோ வெளியிட்டு, சிகிச்சை முடிந்தாலும் தற்போது மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த மாத இறுதியில் மீண்டும் ஷோ ஷூட்டிங்கில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.