நைட் 3 மணி வரைக்கும் அந்த நடிகருடன் பேசுவாரா கீர்த்தி சுரேஷ்? போட்டு வாங்கிய உதயநிதி!

Author: Shree
24 June 2023, 8:22 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்றும் வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உதயநிதியுடன் கலகலப்பாக பேசியுள்ளார். அப்போது தொகுப்பாளர். நீங்கள் இரவு 3 மணிக்கு யாருடன் போன் செய்து பேசுவீர்கள் என கேட்டதற்கு, நான் 10 மணிக்கு மேல் யாரு போன் போனாலும் எடுக்கவே மாட்டேன். இதற்கு உதயநிதி சரி 10 மணிக்குள் 8 மணி? அல்லது 7 மணி என கேட்டதற்கு உதயநிதி சார் கூட தான் பேசியிருக்கேன். அதையடுத்து நானி உடன் பேசியிருக்கேன். இருந்தாலும் உதயநிதி அந்த நபர் யார்? என கேட்டதற்கு நீங்க தான் என்று மாட்டிக்கொள்ளாமல் நாசுக்காக பதில் அளித்தார். இதோ அந்த நேர்காணல் வீடியோ:

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி