ஓவர் தெனாவட்டு.. இனி உன்ன பாக்கவே மாட்டேன்.. பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரே ராதாரவி..!

Author: Vignesh
14 June 2024, 6:15 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

முன்னதாக விஜய்யின் சில தவறான நடவடிக்கையால் சில நடிகர்கள் மனகசப்புக்கும் ஆளாகி உள்ளனர். அந்த வகையில், நடிகர் நெப்போலியன், போக்கிரி படத்தின் போது தன் குடும்பத்தினரை கேரவனில் கூட்டிச்செல்லும் போது அவமானப்படுத்தப்பட்டேன் என்று முன்னதாக தெரிவித்து இருந்தார்.

Vijay-Napoleon-updatenews360

மேலும் படிக்க: பொசுக்கு பொசுக்குனு வளந்துடறாங்க.. பிகில் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பிரஜூனாவா இது..!

இதன் காரணமாக, இன்று வரை விஜய்யை நடிகர் நெப்போலியன் ஒதுக்கி வருவதாகவும் அந்த சம்பவத்தை விஜய் தவிர்த்திருக்கலாம் என்றும் பல செய்திகள் வெளியானது. இதனிடையே, நெப்போலியனை போல், பிரபல நடிகர் ராதாரவியும் விஜய்யின் செயலால் அவமானப்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் ராதாரவி இதை தெரிவித்து இருந்தார்.

radha ravi vijay-updatenews360

மேலும் படிக்க: ரஜினி பட நடிகைக்கு நடக்கும் அவசர கல்யாணம்.. அப்பாகிட்ட கூட சொல்லலையாம்..!

மேலும், சர்கார் படத்தில் வில்லனாக விஜய்யுடன் ராதாரவி நடித்து இருந்தார். அப்போது, தன் பேரன் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால் சர்கார் படத்தின் ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க வைத்ததாகவும், குடும்பத்துடன் விஜய்யை சந்தித்து புகைப்படமும் எடுத்ததாக ராதாரவி தெரிவித்துள்ளார். அதன்பின் சர்கார் படத்தின் ஆடியோ லான்சின் போது மயங்கி மேடை படிக்கல்லில் இருந்து தவறிவிழுந்து விட்டதாகவும், உடனே விஜய் உதவி செய்ததற்கு நன்றி கூட சொல்லாத காரணத்தினால், விஜய் மேனேஜருக்கு போன் செய்ததாகவும்,

radha ravi vijay-updatenews360

அப்போது அன்று வந்தது போல் யாரை கூட்டி கொண்டு வர வேண்டாம் என்றும், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் குடித்துவிட்டு வந்தது போல இப்போது வராதீர்கள் என அசிங்கப்படுத்தி விட்டதனால், உடனே தான் வரலன்னு சொல்லி போனை வைத்துவிட்டேன் என்றும், யாரு தன் குடும்பம் தானே கூட்டிச்சென்றேன் என்றும், அவருக்கு கூட்டமா தான் தெரியும், தன் குடும்பம்-ல விஜய்க்கு, ஓவர் தெனாவட்டு.. இனி உன்ன பாக்கவே மாட்டேன் என்று புலம்பி இருக்கிறார் நடிகர் ராதாரவி.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!