போலீசிடம் சிக்கும் நடிகை ரம்பா? கஸ்டம் ஆபிசரை ஏமாற்றியதால் சர்ச்சை?
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 4:27 pm
நடிகை ரம்பா தமிழ் சினமாவை தாண்டி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், போஜ்புரி படங்களில் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட் உள்ள போதே வெளிநாட்டில் கணவர்,குடும்பத்துடன் செட்டில் ஆனார்.
இதையும் படியுங்க: முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!
இதையடுத்து தற்போது மீண்டும் இந்தியா திரும்பிய அவர், தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். சமீபத்தில் அவர் இந்தியா வந்தது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் வெளிநாட்டில் இருந்து தாவரங்கள் எடுத்து வர அனுமதியில்லை. ஆனால் நான் தண்ணீர் நிறைந்த பாட்டிலில் மருதாணி வேரை எடுத்து வந்தேன். தற்போது அது மரமாகி உள்ளதாக பெருமையோடு கூறியுள்ளார்.

ஆனால் பேட்டியில் அனுமதியில்லாத பொருளை கஸ்டம் ஆபிசருக்கு தெரியாமல் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளதால் ரம்பாவுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறியுள்ளது.
