தயாராகும் ரஜினிகாந்த் பயோபிக்? ஹீரோ இவரா? பிரமாண்டம் கொடுத்த அப்டேட்!

Author: Hariharasudhan
9 January 2025, 12:00 pm

நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் படமாக உருவாக்க விருப்பம் உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி உள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், நாளை பொங்கல் வெளியீடாக வெளியாக உள்ளது. இந்த நிலையில், அதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் உள்பட படக்குழுவினரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தனக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒரு பயோபிக் திரைப்படம் எடுக்க ஆசை என ஷங்கர் கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர் என்றும் புகழாரம் சூட்டி உள்ளார்.

இதனால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடனும் உள்ளனர். அதேநேரம், இது ஒருவேளை அதிகாரப்பூர்வமாக அமையுமானால், ரஜினிகாந்த் வேடத்தில் யார் நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர். முன்னதாக, தனுஷ் இதற்கு தயார் எனக் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shankar willing to do Rajinikanth biopic

ஏற்கனவே, ரஜினிகாந்த் உடன் 3 முறை கைகோர்த்த ஷங்கர், சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதில், சிவாஜி ஆல் டைம் கமர்ஷியல் ஃபேவரைட் ஆக இன்றளவும் உள்ளது. மேலும், எந்திரன் திரைப்படம் சர்வதேச அளவிலும் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதையும் படிங்க: நண்பனை வீட்டுக்குள் நம்பி விட்ட கணவனுக்கு ஷாக்.. மனைவியுடன் படுக்கையை பகிர்ந்த துரோகம்!

இருப்பினும், 2.0 சரிவர மக்கள் மனதில் எடுபடவில்லை. அதேநேரம், ஷங்கர் இயக்கத்தில் இறுதியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், இந்தியன் 3 மற்றும் வேள்பாரி நாவலை 3 பாகங்களாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 72

    0

    0

    Leave a Reply