தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் இறங்கிடுவார் என கூறப்பட்டது. ஆனால், சினிமாவிற்கு டாட்டா காட்டும் கடைசி திரைப்படம் விஜய்யின் வரலாறு பேசும் திரைப்படமாக தரமாக இருக்கவேண்டும் என கருதி கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் விஜய்.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் கோட்டா நீலிமா என்பவர் எழுதிய நாவல் ஷூஸ் ஆஃப் தி டெட் கதையை கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். இந்த கதையில் கோவிந்த் , கோபிநாத் இருவரும் சகோதரர்கள். இவர்களில் கோபிநாத் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இதனையடுத்து தனது சகோதரனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்துகிறார் கோவிந்த். இந்த நாவல் விவசாயிகளின் துயரங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் நிர்வாக தோல்விகளையும் தோலுரித்து காட்டியது.
இந்த கதையை தான் தளபதி 69 படத்திற்காக அரசியல் , ஊழல், லஞ்சம் என சீன் பை சீன் பக்கா பொலிட்டிகல் கதையாக தயார் செய்துள்ளாராம் வெற்றிமாறன்.விஜய் அரசியலுக்கு வரவுள்ள நிலையில் கடைசி படமாக இது வெளியானால் தரமான அரசியல் படமாகவும், மிகச்சிறந்த அரசியல் என்ட்ரியாகவும் அமையும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷூஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் ஏற்கனவே வாங்கி வைத்துவிட்டார் என்றெல்லாம் ஏற்கனவே செய்தியில் பார்த்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை பிரபல நடிகர் விஷால் இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு எண்டு போட்டுவிட்டு அடுத்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால் இப்படத்தில் தரமாக நடிக்க விஜய் முடிவெடுத்துள்ளார். அப்படியிருக்கும்போது விஜய் விஷால் இயக்கத்தில் எல்லாம் நடிப்பாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதெல்லாம் நடக்குற காரியமா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஒருவேளை விஜய் அரசியலில் பின்னடைந்துவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்து விஷால் இயக்கத்தில் நடிப்பார் என ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.